Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

செவ்வாய், 12 நவம்பர், 2019

ஐப்பசி மாதப் பௌர்ணமி 2019


இன்று ஐப்பசி மாதப் பௌர்ணமி நாளை முன்னிட்டு சந்திரசேகரீச்சரம் எம்பெருமானின் லிங்கத்திருமேனியிற்கு அன்ன அபிஷேகம் செய்து வழிபட்டோம். எல்லா உயிர்கட்கும் உணவளித்து காக்கின்ற ஈசனுக்கு அன்ன அபிஷேகம் செய்து நன்றிக்கடன் செலுத்தினோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி மகட்கு. (திருவள்ளுவர்)


அடர்ந்த காட்டுக்குள் நடந்து சென்றோம். மழையின் காரணமாக பாதை சேறாகக் காணப்பட்டது. இப்பாதையில் காட்டுயானைகள் நடந்து சென்றதனால் பாதையெங்கும் கிடங்குகளாக இருந்தன. சிரமப்பட்டு நடந்து சென்று சந்திரசேகரீச்சரப்பெருமானைக் கண்டமாத்திரத்தில் கவலைகளையெல்லாம் மறந்தோம் பேரானந்தங்கொண்டோம்.


அபிடேக ஆராதனைகள் செய்தும் சிறப்பாக அன்ன அபிடேகம் செய்தும் வழிபட்டோம்.




சனி, 7 செப்டம்பர், 2019

ஆடி அமாவாசை 31.07. 2019

இவ்வருடமும் அடியமாவாசையை முன்னிட்டு சந்திரசேகரீச்சரத்தில் விசேட பூசைகளும் அபிடேக ஆராதனைகளும் இடம்பெற்றன.

வௌவாலை தீர்த்தக்கேணியில் அடியார்கள் நீராடி கேணிக்கரையிலே பிதிர்க்கடன்களை நிறைவேற்றினார்கள்.


சனி, 2 மார்ச், 2019

மகா சிவராத்திரி 04.03.2019


அடியார்களே,
ஈழத்திருநாட்டின் வடபால் வன்னிப்பிரதேசத்தில் வெங்கலச்செட்டிகுளம் பகுதியில் வரலாற்றுப்புகழ் மிக்க மூர்த்தி தலம் தீர்த்தச் சிறப்புப் பெற்ற வௌவாலை சந்திரசேகரீச்சரம் சிவனாலயத்தில் நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் மாசி மாதம் 20 ம் நாள் திங்கட்கிழமையன்று (04.03.2019 ம் திகதி)  காலையில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அன்று இரவு மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு  நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெற்று வழிபாடுகள் செய்வதற்கு திருவருள் கூடியுள்ளது.

மெய்யடியார்களே மகத்துவமிக்க இந்த மகா சிவராத்திரி நாளிலே ஆலயத்திற்கு வருகை தந்து மகா சிவராத்திரி விரதத்தை அனுட்டித்து பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தமான வௌவாலையில் நீராடி தங்களின் கரங்களினாலே சிவலிங்கத்துக்கு அபிடேகம் செய்து புண்ணியம் பெறுவீர்களாக.

அடியார்களே பூசைக்குத் தேவையான பால்பழவகைகள்இளநீர்பூக்கள்பூமாலைகள்போன்றவற்றையும் அர்ச்சனைப் பொருட்களையும் ஆலயத்திற்கு கொண்டு வரவும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு  மறுநாள் காலை அன்னதானம் வழங்கப்படும்(அன்னதானம் செய்ய அடியார்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம்).

(ஆலயம் அமைந்துள்ள பகுதி காட்டுச்சூழல் என்பதனால் யானைகள் போன்ற காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் பொருட்டு மாலை 05.00 மணிக்கு முன்னரே ஆலயத்துக்கு வந்துசேருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்)

ஆடி அமாவாசை விரதம் 2018

இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் பொருட்டான பிதுர்க்கடன் செலுத்தும் ஆடி அமாவாசை விரத வழபாட்டு நிகழ்வுகள் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றன.

மகா சிவராத்திரி 2018


இவ்வாண்டும் மிகச்சிறப்பாக மகாசிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடைபெற்றன

வியாழன், 23 பிப்ரவரி, 2017

மகா சிவராத்திரி 2017.02.24


அடியார்களே,
ஈழத்திருநாட்டின் வடபால் வன்னிப்பிரதேசத்தில் வெங்கலச்செட்டிகுளம் பகுதியில் வரலாற்றுப்புகழ் மிக்க மூர்த்தி தலம் தீர்த்தச் சிறப்புப் பெற்ற வௌவாலை சந்திரசேகரீச்சரம் சிவனாலயத்தில் நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் மாசி மாதம் 12 ம் நாள் வெள்ளிக்கிழமையன்று (24.02.2017 ம் திகதி)  காலையில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அன்று இரவு மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு  நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெற்று வழிபாடுகள் செய்வதற்கு திருவருள் கூடியுள்ளது.

மெய்யடியார்களே மகத்துவமிக்க இந்த மகா சிவராத்திரி நாளிலே ஆலயத்திற்கு வருகை தந்து மகா சிரைாத்திரி விரதத்தை அனுட்டித்து பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தமான வௌவாலையில் நீராடி தங்களின் கரங்களினாலே சிவலிங்கத்துக்கு அபிடேகம் செய்து புண்ணியம் பெறுவீர்களாக.

அடியார்களே பூசைக்குத் தேவையான பால், பழவகைகள், இளநீர், பூக்கள், பூமாலைகள், போன்றவற்றையும் அர்ச்சனைப் பொருட்களையும் ஆலயத்திற்கு கொண்டு வரவும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு  மறுநாள் காலை அன்னதானம் வழங்கப்படும்(அன்னதானம் செய்ய அடியார்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம்).



புதன், 8 பிப்ரவரி, 2017

சந்திரசேகரீச்சரம் தொடர்பாக வேறு சில ஆலய நூல்வெளியீடுகளில் இருந்து சில பதிவுகள்

சந்திரசேகரீச்சரம் தொடர்பாக வேறு சில ஆலய நூல்வெளியீடுகளில் இருந்து சில பதிவுகள்



01. வவுனியா கோயில்குளம் சிவன் கோவில்  - சிவதத்துவ மலர்


02. முல்லைத்தீவு வற்றாப்பழை கண்ணகியம்மன்- இராஜகோபுர கும்பாபிடேக விழா மலர்


வவுனியா கோயில்க்குளம் அகிலாண்டாஸ்வரி உடனுறை அகிலாண்டாஸ்வரர் திருக்கோவில் கும்பாபிடேக மலர் வெளியீடு (சிவதத்துவ மலர் - 1996)

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய இராஜகோபுர கும்பாபிடேக விழா மலர் (2011)