வணக்கம்
சிவபிரான் அடியார்களே
மகா பிரதோச விரதமான சனிப்பிரதோச
விரத நாளான இன்று (12.11.2016)
சந்திரசேகரீச்சரப்பெருமானுக்கு பிரதோச பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
கணபதி பூசை, பஞ்சகவ்விய பூசை,
அபிடேக ஆராதனைகள் செய்தோம்.
அபிடேக வேளையில் தெய்வ உருவ சாந்நித்தியம்
நன்கு உணரப்படக்கூடியதாக இருந்தது. வினாயகரின் உருவம் பிரமாண்டமானதாக காட்சியளித்தது.
இதன்பொழுது காட்டுயானைகள் பிளிறின.
எம்பெருமான் வெளிக்கொண்டு
வரப்பட்ட பின்னரான வரலாற்றில் முதற்றடவையாக வில்வ தோத்திர பாராயணம் செய்யப்பட்டது.
இதன்போதும் காட்டு யானைகள் மகிழ்ச்சி ஆரவாரமாய்
ஓசைகளையும் பிளிறல்களையும் வெளிப்படுத்தின. நேற்றய நாளான வெள்ளிக்கிழமை
மாலைநேர பூசையின்போது எம்பெருமானுக்கு அண்மையில் இரண்டு காட்டுயானைகள் பார்த்தவண்ணம்
நின்றிருந்தன. எமக்கு எத்துன்பத்தையும் விளைவிக்கவில்லை.
காட்டுப்பகுதி என்பதனால் மின்சாரவசதி
கிடையாது. எனினும்
மூன்று அகல்விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு அவ்வெளிச்சத்திலேயே பூசைகளைச் செய்தோம்.
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இடம்பெற்ற
அதே பாரம்பரிய முறைப்படியான பூசைவழிபாட்டு முறைகளையே இன்றளவும் செய்யக்கிடைக்கப்பெற்றது
எமது தவப்பயனேயாகும். இந்த வகையில் எமது முன்னோர்கள் எந்த வகையிலும்
முன்னோடிகள்தான் என எண்ணத்தோன்றுகிறது.
”மேன்மை கொள் சைவநீதி விளங்குக
உலகமெல்லாம்”.