நாம் குறிப்பிட்டது போல் இறையருளால் தைப்பூச நாளான
இன்று (24.01.2016) சந்திரசேகரீச்சரத்தில் வழிபாடுகள் அபிடேகஆராதனைகளுடனும் யாகம் பூசைகளுடனும் இனிதே
இடம்பெற்றது. அடர்ந்த காட்டிடையே சந்திரசேகரீச்சப்பெருமான் உறைகின்றபோதும் காட்டுவழியே சிரமங்களிடையே பயணித்து வரவேண்டியிருந்தபொழுதிலும் இறைவனைக்காணும் ஆவல் உந்தப்பெற்று
வருகைதரும் அடியார்களை நினைக்க இறைபக்தி மேலும் வலுக்கிறது. இன்று வழிபாட்டில் கலந்துகொண்ட
அடியார்கள் தமக்கு பல்வேறுவிதமான மனநிறைவான அனுபவங்கள் ஏற்பட்டதை கூறி மகிழ்ந்தவண்ணமிருந்தனர்.
வழமைபோன்று இன்றும் இரவு நிலவொளியைத்தவிர வேறு வெளி்சசமில்லாததன் காரணமாக காட்டுச்சூழல் அச்சத்தை
ஏற்படுத்துவதாக இருந்தது. யானைககள் பிரதானவீதியில்கூட நடமாடுவதாக சேனைப்பயிர்களிற்கு
காவலிருப்போர் எச்சரித்திருந்ததனால் இன்னும் அச்சம் ஒருபடிமேலோங்கியே இருந்தது. எப்படியோ
காட்டைத்தாண்டி பிரதானவீதிக்கு வத்துவிட்டோம். நான் உந்துருளியிலும் ஏனைய அடியார்கள்
முச்சக்கரவண்டியிலுமாக வந்துகொண்டீருந்தோம். இருபுறமும் காடுதான் வேறொன்றும் தெரியவில்லை.
திடீரென்று ஒரு சத்தம் காதையடைக்க நெஞ்சம்பதைக்கும்வகையில் கேட்டது. நடுவீதியில் நாமும்
காட்டு யானையும் நேருக்குநேர் எதிர்ப்பட்டு விட்டோம். அதனால் யானை பிளிறிய சத்தம்தான்
அது. நல்லவேளை கைதொடும் தூரத்தில் யானை பக்கவாட்டாக திரும்பிக்கொண்டது. நாம் யானையால்
தாக்கப்படவில்லை. ஈசன் எம்மைக்காத்தான். இருமாதங்களிற்க்கு முன்பு அதேயிடத்திற்கண்மையில்
கடந்த 28.11.2015 ம் திகதி சனிக்கிழமையன்று மாலைப்பொழுதில் நடுவீதியில் எதிர்த்திசையில் யானை துரத்திவர உந்துருளியை
சிரமப்பட்டுத்திருப்பி ஒருநொடியில் தப்பித்துக்கொண்டேன். அன்றும் ஈசன் எனைக்காப்பாற்றியருளினான். இது இப்படியிருக்க காட்டு யானைகள் கூட்டம் எம்பெருமானடியில் செய்த ஆச்சரியமுட்டும் பல தெய்வீகச் செயல்களையும் குறிப்பிட்டடேயாகவேண்டும் அவற்றைப் பின்னர் கூறுகிறேன். அன்பே சிவம். ஓம் நமசிவய.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக