புராதன ஆலயமான சந்திரசேகரீச்சரத்துக்கு கல்வித்திணைக்களத்தினரின்
ஆன்மீகச்சுற்றுலா – பூசை – வழிபாடு - வரலாற்றுத்தேடல்
வவுனியா தெற்கு வலய கல்வித்திணைக்களப்
பணிப்பாளர் மற்றும் வெங்கலச்செட்டிகுளம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் உட்பட அதிபர்மார், ஆசிரிய ஆலோசகர்மார்,
ஏனைய கல்விசார் உத்தியோகத்தர்களும் கப்பாச்சிக் கிராம மக்களும் ஒன்றிணைந்து
2017.01.22 ஞாயிற்றுக்கிழமையான இன்று சந்திரசேகரீச்சரம் வருகைதந்து வினாயகப்பெருமானிடத்து
இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு அருளாசி பெற்றனர்.
இன்று விசேடமாக அபிடேக ஆராதனைகள்
இடம்பெற்றன. பொங்கி மடைபரவி பூசைகள் செய்தோம்.
கப்பாச்சிக் கிராமத்தினரால் பொங்கல்
பொங்கப்பெற்றது.
நிகழ்வில் கலந்து சிறப்பிப்பித்த அதிகாரிமார்
இந்த தொன்மை மிக்க வராற்றுப்புகழ்மிக்க ஆலயத்தையும் என்றுமே வற்றாத நீண்டு பரந்த இயற்கைக்கேணியான
வௌவாலை தீர்த்த்த்தையும் கண்டு ஆத்மநிறைவு பெற்றனர். சந்திரசேகரீச்சரத்து தொன்மைமிகு
வரலாற்றையும் எம்மிடம் கேட்டறிந்துகொண்டனர்.
தொடர்ந்து
சந்திரசேகரீச்சப்பெருமானுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் விசேட
அபிடேக ஆராதனைகள் செய்ப்பட்டு மடைபரவி பூசைகள் செய்தோம்.
இன்றய நாளில் எம்மையெல்லாம் தன்னடிக்கு
அழைத்து அருள்பெறவைத்த பரம்பொருளுக்கு நன்றி நன்றி. ஓம் நமசிவய, அன்பே சிவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக